பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..
காதலர் தினம் 2013

 By- தமிழ்நிலா
 Music Credit- U1"பூக்களும் பட்டாம் பூச்சிகளின் தேவதையும்.."

01
உல‌கி‌ல் ‌கி‌ட்ட‌த்த‌ட்ட
இருபதா‌யிர‌ம் வகை
ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் உ‌ள்ளனவாம்..
உன்னையும் சேர்த்து...

02
சூரியனை கண்டபின் பூக்கும் 
மலர்க்காடு போல்,
உன்னைக் கண்டபின் பூக்கிறது..
என் மனக்காடு...!

03
பட்டாம் பூச்சிகள் யோசிக்கின்றன
நீ பூவாய் பிறந்திருக்கலாம் என்று
பூக்கள் பேசிக்கொண்டன
இவள் பட்டம் பூச்சி என்று..

04
பூக்களின் சட்டை
உனக்கு மட்டுமே
அழகாக உள்ளது...

05
உன் கூந்தல் சிந்திய
நீரில் இருந்து முளைத்தவையே
இந்த பூக்கள்...

06
தேவர்களின் கால்
நிலத்தில் படுவதில்லையாம்
உன்னை பார்த்தபின்
என் கால்களும் கூட..

07
நீ
பூக்களை சுற்றி ரசித்துக்கொண்டாய்
பட் டா ம் பூச்சி
பறப்பது போல் இருந்தது எனக்கு ...

08
தலையில் சூடிக்கொள்ளாதே
தேனை உருஞ்சி விடும்
இந்த பூக்கள்..

09
இறக்கை முளைத்த
வானவில்லின் தோழி நீ..

10
மழையில் நனைந்தபடி
ஆடிக்கொண்டிருந்தாய்..
பூக்கள் அபிநயித்துகொண்டன...

11
சிறகடிக்கும் பட்டாம் பூச்சிகளும்
சிறைப்பிடிக்கும் என்று
உன்னிடம் தான்
கற்றுக்கொண்டேன்..

12
இங்கே ஒரு
பட்டாம் பூச்சி
பூக்களின் ஆடையுடன்..

13
பட்டாம் பூச்சியின் கால்களில்
ஒட்டிய மகரந்தம் போல
என்னோடு நீ..

14
நீ உறங்க போவதையே
பூக்களால் தாங்க முடிவதில்லை
அதனால் தான் என்னவோ
மாலையிலே உதிர்ந்துவிடுகின்றன.

15
பட்டாம் பூச்சிகளின் வலையில்
சிலந்தி எப்படி
சிக்கிக்கொண்டது

16
பூக்களின் கோலம் நீ...
பட்டம் பூச்சிகளின் ஓவியம் நீ

17
மெதுவாக நட
பூச்சாடி ஒன்று
தப்பி ஓடுகிறது என
நினைக்கப் போகிறார்கள்...

18
பூக்கள்
பட்டாம் பூச்சியாகின்றன
உருமாற்றம் இப்படியும் நடக்கும்..
தேவதை என் மனைவி ஆகும் போது..

19
பட்டாம் பூசிகள்
தூக்கி வைத்து விளையாடும்
குட்டி தேவதை நீ..

20
பட்டாம் பூச்சிகளுடன்
விளையாடுகிறாய் நீ
பூக்கள்  பறந்துவிளையாடுவது
போல் எனக்கு..

21
கொலிசுகள்
கொஞ்சி விளையாடுகின்றன,
தேவதைகள் அலறினார்கள்
இதோ எம் தேவதை வருகிறாள் என்று...

தமிழ்நிலா

நீ தான் என் சுவாசம்...


1
எத்தனையோ காதல்கள்
என்மேல் - எனக்கு 
உன்மேல் மட்டுமே காதல்..
--------

2
முட்கள் நிறைந்த
என் வாழ்க்கையில்
நீ மட்டும் எப்படி ரோஜாவாக...??
------

3
நீல வானத்தில்
நிலவினை போல - என்
நீள கனவினில் நீயடி..
-----------

4
காதல் தேசத்து
அகதி நான்..
உன் காதலன் என்று
கைது செய்தாய்..

சிறை எனக்கு அல்ல
உனக்கு
என் இதயத்தில்...!!
----------

5
சொர்க்கத்தின் வாசலும்
நரகத்தின் வாசலும்
உன் கண்களில் தான்....
------

6
என் கிறுக்கலை கவிதை
என்பவள் நீ...
கவிதைக்குள் இருப்பவளும் நீ...
---------

7
உந்தன் புன்னகையே
எந்தன் முகவரி....
அதனால் தான் என்னவோ

நான் தொலையாமல்
இருக்கிறேன்....
----------

8
இரவினில் கூட
உன்னைப்பார்க்கிறேன்...
கண்களால் அல்ல
கனவுகளால்....
----

9
என் ஆதிமுதல்
அந்தம் வரை
உனக்கு அத்துப்படி
அது எப்படி...

என் ரகசிய உலகத்தின்
அரசியா நீ?
--------------

10
உன் வியர்வையை
துடைத்துவிடு...
தங்கத்தில் இருந்து முத்தென்று
தங்க வியாபாரிகள்
வரப்போகிறார்கள்...
-----

11
பூக்கள் உன்னை பார்த்து
பேசிக்கொள்கின்றன

தினம் நாம் பூத்து
உதிர்கிறோம்
இவள் உதட்டில்
உதிர்ந்தால்
பூத்துவிடலாம் என்று..
----------

12
சூரியனை மட்டும்
சுற்றும்
சூரிய காந்தி போல்
உன்னை மட்டுமே
நான் சுற்றிக்கொண்டிருக்கிறேன்...
----------

13
காதல் மோட்சம்
அடைவதற்காய்
என்னிடம் உள்ள
ஒரே மந்திரம்....

உன் பெயர் தான்...
-----

14
உன்னை எவ்வளவு பிடிக்கும்
என்று கண்டு பிடிப்பதற்குள் 
கூடிக்கொண்டே போகிறது

உன்மேலான என் காதல்....
------

15
இதயத்தை தொலைத்துவிட்டு 
தேடினேன்
கிடைக்கவில்லை...
இதயமே என்னை
தேட தொடன்கியது...

உன் காதல் வந்தபிறகு..
----

16
காகிதங்களை காலம்
தின்றுவிடும் என்பதால்..

உன் நினைவுகள் எல்லாம்

என் மன டைரியிலே...
------

17
தினமும் இரவில்
தோற்றுப்போகிறேன்...

கனவில் வரும் - உன் 
நினைவு போராட்டங்களுடன் 
போராடி...
-----

18 
உனக்கு நான்...
எனக்கு நீ...
நமக்கு நாம் ..

இதில் உனக்கு அதிகம்
எது பிடிக்கும்...!!
-----

19
என் கவிதைகளை நீ
வாசிக்கிறாயா
தெரியவில்லை ஆனால்

என் கவிதைகளால் நீ
வாசிக்கப்படுகிறாய்...
------

20
நீ
தனிமையை விரும்புகிறாய்
நான்
தனிமைப்படுத்தப்படுகிறேன்..
நாம்
சேர்ந்ததால் தனிமை
தனிமையாகி விட்டது போலும்...
-----

21
காற்றின் உருவம்
தெரிவதில்லை...
உன் காதலில்
குறையை கண்டதில்லை...
----

22
என் வார்த்தைகள்
எல்லாம் மௌனவிரதம்
இருக்கின்றன..

நாம் கண்களால் 
கதைத்து விடுவதால்...
----

23
உன் உதடுகளில் தான்
என் புன்னகை
மலர்கிறது...

கண்களில் கண்ணீர்
வராதவரை....
----

24
எனக்கு மனைவியாக
(வர) தட்சணை
எவ்வளவு கேட்பாய்...??

25
முத்திரையாக
இதயத்தை ஒட்டி...

காதல் கடிதங்களாக
கவிதைகளை அனுப்புகிறேன்....

உன் பதில் என்ன
காதல் தானே...?


என் உயிர் கவிதை...


அன்பே
அழகெல்லாம்
அசந்து போகும்
அழகி நீயடி...!!


ஆருயிரே - என்
ஆயுள் - உன்
ஆயுளின்
ஆழத்தில் உள்ளதடி.....!!


இளையவளே
இனியவளே - உன்னால்
இனிமயனதடி
இன்று என் வாழ்வு...!!


ஈன்ற தாயின்
ஈகையும் - காதலை
ஈன்ற உன்
ஈகையும் எனக்கொன்று...!!


உயிரே என்
உயிராய்
உள்ளவளே என்
உயிரில் கலந்துவிட்டாய்...!!


ஊமை என்னை
ஊஞ்சலில் ஆடவைத்த என்
ஊதாப்பூவே நாம்
ஊர் போற்ற வாழ்வோம் வா...!!


எந்தன்
எதிர்காலம் நீ
என தெரியாமல்
என்னை இழந்துவிட்டேன்..!


ஏன் இந்த வாழ்க்கை என
ஏங்கிய போது நீ வந்தாய்
ஏழை நான் உன்னால்
ஏழு உலகமும் பெற்றேன்...!!


ஜம் பூதம் ஆளும்
ஜநிலங்கள் வாழ்த்தும்
ஜம் பொறியோடு வரும் நீ என்
ஜம் புலனில் உலவுகிறாய்....!!


ஒருவனுக்கு
ஒருத்தியாய் வாழ்வோம்
ஒரு நாள் வருவான்
ஒளியாக எம் பிள்ளை...!!


ஓவியமே உன்னை எண்ணி
ஓயாமல்
ஓடி என் இதயம்
ஓய்வின்றி துடிக்கிறது...!!

ஒள
ஒள என கெளவிடும்
ஒளடவ ராகமே
ஒளவையின் தமிழே
ஒளடதமதடி உன் அன்பு...!!

BY தமிழ்நிலா


அழகுஅழகு ஆபத்து உண்மை தான்
ஆனால்....
ஆபத்துகள் அழகாக தெரிவது
உன்னில் மட்டும் தான்.....

உன் மௌனம்..மௌன மொழிகளை
கற்றுக்கொண்டு இருக்கிறேன்
உன்னுடன் பேசுவதற்காய்..

மௌனத்தில் உவமைகளை
தேடுகிறேன்..
உன்னை பற்றி எழுத..

உன்னை பற்றி எழுதினால்
கவிதை என்கிறாய்
மௌனமாக...

நான் எழுதும்
கவிதைகளின்
தலைப்புக்கள் எல்லாமே
உன் மௌனம் தானே..

மௌன மொழிகளின்
பொருள்ச்சிறப்பு
நீ புன்னகைப்பது...

உன் புன்னகையை
பார்த்ததால் மௌனமே
மௌனமாகிவிட்டது...

நான் எத்தனை
கேள்வி கேட்டாலும் நீ
சொல்லும் ஒரே பதில்
மௌனம் தானே ....


எப்படி நீ மௌனமாக
இருக்கிறாய்
மௌனம் என்ன
உன் தாய்மொழியா..??


அதனால் தான் என்னவோ

உன் மௌனத்தை பார்த்தே
எனக்கு
உன் மேல் காதல்...

by sTn

உனக்காக மட்டும் என் காதல் - 10

Vaagai Sooda Vaa
- - - - - - - - - - - - - - - - - -

நிலவில் ஆம் ஸ்ட்ரோங்
காலை தான் வைத்தான்..
நான் உன்னில் காதலை
வைத்து விட்டேன்...

நான் காதலை வைத்ததுக்கு
நிலவு நீயே சாட்சி ...
- - - - - - - - - - - - - - - - - -

விழியினில் விழுந்து
சிந்தையில் வளர்ந்து
இதயத்தில் படர்ந்து
என்னில் காதலாய்
பூப்பவளே...!!

என் காதலியே...
- - - - - - - - - - - - - - - - - -

கோடை காலத்து மழை நீ
மாரி காலத்து சாரல் நீ
பௌர்ணமியில் நிலவு நீ

பூத்த பூவின் வாசம் நீ
வீசும் காற்றின் கீதம் நீ..
என் உடலில் உயிர் நீ...!
- - - - - - - - - - - - - - - - - -

இதுவரை உன்னால்
என் கன்னங்கள்
நனையவில்லை...
எனக்கு தான் நீ
என்ற நம்பிக்கையில்...!
- - - - - - - - - - - - - - - - - -

கண் இமைக்கையில்
கால மாற்றம்..
நீ அணைக்கையில்
குளிர் காலம்...
நமக்கென ஒரு
புது உலகம்....

வாழ்ந்துவிடுவோமா...??
- - - - - - - - - - - - - - - - - -

உனக்காக மட்டும் என் காதல் - 09

Vaagai Sooda Vaa
- - - - - - - - - - - - - - - - - -

யார் பேசினாலும்
உன் குரல்  கேட்கிறது
யாரை  பார்த்தாலும் 
உன் முகமே தெரிகிறது

காதல் நோய் 
முற்றி விட்டதாம்..
என்ன செய்யப்போகிறாய்..?
- - - - - - - - - - - - - - - - - -

தூறலாய் ஆரம்பித்து
பெரும் மழையாய்
பொழிகிறது
காதல்..

துளியாய் சேர்ந்து  
கடலாய் போய்விட்டது 
ஆசைகள் ..!
- - - - - - - - - - - - - - - - - -

கற்பனை குளத்தில்
காதல் கல் எறிந்துவிட்டது..
கவிதைகள்
என் சுவாசமாகிவிட்டது...

உன்னை கண்டபின்
கற்பனைகள்கவிதையாய்
பெருக்கெடுக்கிறது...
- - - - - - - - - - - - - - - - - -

தனிமை இரவில்இரவுக் கவிதை
எழுதிடும் போது
காதலி நீ வருவாய்
கனவாக...!!

அது முடியும் பொழுதில்
விடியும் பகலில்
தினம் இருப்பாய் நீ
கவியாக...!!
- - - - - - - - - - - - - - - - - -

காதல்அழகான பொய்களை
சொல்ல பழக்கியது...

நான் சொல்லும் பொய்களையே
கவிதை என்கிறாய்...நீ..
- - - - - - - - - - - - - - - - - -

உனக்காக மட்டும் என் காதல் - 08

- - - - - - - - - - - - - - - - - -

நான்கு வருடத்திற்கு
ஒருமுறை வரும்
லீப்  வருடத்திற்காய்
காத்திருக்கிறேன்..

உன்னுடன் அதிகமாய்
ஒரு நாள் வாழ...!!
- - - - - - - - - - - - - - - - - -

உன்னிடத்தில் எவ்வளவு
காதலோ தெரியாது...
ஆனால்

உன்னை விட எதிலுமே
இவ்வளவு காதல் இல்லை...!!
- - - - - - - - - - - - - - - - - -

உன் பருவ தேடலில்
அகப்பட்டது காதல்..
என் பாசதேடலில்
அகப்பட்டது நீ தான்...
- - - - - - - - - - - - - - - - - -

உன் கனவுகளை
கொண்டு வா அன்பே
கல்யாணத்தின் பின்
நினைவாக்கி தருகிறேன்...!!
- - - - - - - - - - - - - - - - - -

என் இதயத்தின் கதவுகள்
இறந்தகாலத்தில்
ஒருமுறை திறந்தது
உன்னால் தான்..

நிகழ்காலமும், எதிர்காலமும்
உன்கைகளில் தான்..
- - - - - - - - - - - - - - - - - -

உனக்காக மட்டும் என் காதல் - 07

- - - - - - - - - - - - - - - - - -

ஒரு நிமிடத்தில்
ஒரு நொடியேனும்
சண்டை போட ஆசை

செல்ல சண்டையில்
காதல் வாழும் என்றதால்..!
- - - - - - - - - - - - - - - - - -

நான் ராமன் இல்லை..
என சொன்னால்நீங்கள் இராவணன் இல்லை
என்கிறாய்...

காரணம் கேட்டால் சிரிக்கிறாய்
என்னவாயிருக்கும்...!!
- - - - - - - - - - - - - - - - - -

எம் கல்யாண நாள்
எப்போது வரும் என்றேன்..
எப்போது காதலிக்க
தொடங்கினோமோ அன்றுதான்
என்றாய்...

நம்பவே முடியவில்லை...!!
- - - - - - - - - - - - - - - - - -

சாகும் போது
எங்கே இருப்பேனோ தெரியாது
ஆனால் 

இருக்கும் பொது
உன்னை மட்டுமே
காதலித்துக்கொண்டு இருப்பேன்..!!
- - - - - - - - - - - - - - - - - -

சிதைந்து தொங்கிய
என் வாழ்வை நீ
தூக்கணாம் குருவிக்கூடாய்
மாற்றினாய்..

இப்போது கூட்டுக்குள்
இருப்பவள் நீ மட்டும் தான்..!!
- - - - - - - - - - - - - - - - - -

உனக்காக மட்டும் என் காதல் - 06- - - - - - - - - - - - - - - - - -

நீ தினம் I Love U
போடுவதால் தொலைபேசி 
உன்னை காதலிக்க
தொடங்கிவிட்டது போல...

நான்
யாருக்கு தகவல் அனுப்பினாலும் 
உனக்கு வருகிறது என்கியறாய் ...

- - - - - - - - - - - - - - - - - -

நான் என்ன கேட்டலும்
வெக்கம் என்பாய்,
குழந்தையாகி 
அடம்பிடிக்கையில்..
எல்லாவற்றையும்
தந்துவிடுவாய் ....

எனக்கு 
உன் வெக்கம் வேண்டும் 
தருவாயா..?

- - - - - - - - - - - - - - - - - -

உன் வெக்கத்தை
பார்த்து  எனக்கும்
வெக்கப்பட
ஆசை வந்துவிட்டது...

எல்லாவற்றுக்கும் வெக்கப்பட
எப்படி முடிகிறது...!!

- - - - - - - - - - - - - - - - - -

உனக்கே தெரியாமல் 
உன்னை பலமுறை 
பாக்கிறேன்..
என் வீட்டு கண்ணாடியில்...!!

என் பிரதி பலிப்பு
நீ மட்டும் தானே...!

- - - - - - - - - - - - - - - - - -

ஒரு நொடிக்கு 
ஒரு கோடி முறை 
உன்னை பார்க்கிறேன்...

ஒவ்வொரு தடவையும் 
ஒரு லட்சம் தரம்
எப்படி சிரிக்கிறாய்..!!
- - - - - - - - - - - - - - - - - -

உனக்காக மட்டும் என் காதல் - 05


- - - - - - - - - - - - - - - - - -

சாமி கும்பிட நீ போனால் 
கல்லுக்கே கண் வருகிறது..
கை கூப்பி நீ தொழுகையில் 
உன்னையே தொழுகிறது...

தேவர்களுக்கும்
நீ தான் தேவதையாம்...!!

- - - - - - - - - - - - - - - - - - 

சாப்பிட நீ உட்கார்ந்தால்
சாப்பாட்டுக்கே
பசியெடுத்து உன்னையே
உண்டுவிட துடிக்கிறது...

உன் எச்சில் பட்டால்
விசமும் அமுதமாகுமடி..!

- - - - - - - - - - - - - - - - - - 

என் தோளில் தூங்க 
ஆசை என்பாய்... 
உனக்கு தெரியாதா

அது தான் உனக்காக 
நான் வைத்துள்ள மஞ்சம்...!!

- - - - - - - - - - - - - - - - - -
எனக்கு இப்போது
இரண்டு செல்லங்கள்..
ஒன்று நீ... மற்றையது
தொலைபேசி...

தொலைவில் உள்ள
உன் செய்தி கொண்டுவருவது
அது தானே...!!

- - - - - - - - - - - - - - - - - -

தொலைபேசி அலாரத்தைவிட
அதிகம்  அடிப்பது
என் இதயம் தான்....

உன் காதல் கடிதம்
இதில் தானே வருகிறது..!

- - - - - - - - - - - - - - - - - -

உனக்காக மட்டும் என் காதல் - 04


- - - - - - - - - - - - - - - - - - 

கங்கை கூட உன் வீட்டு
கிணற்றில் சங்கமிக்கிறதாம்...
நீ குளிக்கையில்
உன்னில் குளித்திட..

பார்த்தாயா நீருக்கும்
உன்னில் ஆசையடி...
- - - - - - - - - - - - - - - - - - 


தினம் நீ குளிப்பதால்
அழகு வருவதாக நினைக்கிறாய்.
எனக்கு மட்டும் தான் தெரியும்
அழகு கரைகின்றது என்று..!!

வாழை மரங்களை பார்
சிவந்து விட்டன..
நீ குளித்த நீர் குடித்து....!!
- - - - - - - - - - - - - - - - - - 

என் கண்களால்
கண்டுவிட்டேன்...
வேலி மரங்களும்
கண்கள் முளைத்து விட்டது,

கிணத்தடியில் மட்டும்
ஆடைகளை மாற்றாதே..
- - - - - - - - - - - - - - - - - - 

இந்த உலகத்தில்
கொடுத்துவைத்தது
ஆடை மாற்றும்
கண்ணாடி தான்...

அந்தரங்கத்தை அடிக்கடி
பார்ப்பது அது தானே...
- - - - - - - - - - - - - - - - - - 

உன் வீட்டு கொடியில்
காய்கின்ற உன்
உடைகளுடன்
சேர்ந்து தொங்குகின்றது

என் இதயமும்...
- - - - - - - - - - - - - - - - - -  

உனக்காக மட்டும் என் காதல் - 03- - - - - - - - - - - - - - - - - - 

நீ தந்த முத்தத்தில்
உன் மூச்சு என்னில்
நிரம்பி விட்டது..

இப்போது உன் மூச்சில்
நான் வாழ்கிறேன் ..!!

- - - - - - - - - - - - - - - - - - 

வங்கிப் பெட்டகத்திலும்
இனி இடம் இல்லையாம்
என்ன செய்வது...??

நீ தரும் முத்தங்களை
சேமித்து வைப்பதற்கு....!

- - - - - - - - - - - - - - - - - - 

எத்தனை முறை
உன்னை பார்த்தாலும்
முதல் முறை கண்ணீருடன்
பார்த்த அந்த நாள் மறக்காது....

எல்லா நாளையும் விட
அன்று தான்
அழகாய் இருந்தாய்...!!

- - - - - - - - - - - - - - - - - -  

இதுவரை என்னால்
கண்டுபிடிக்க
முடியவில்லை...!!
கண்களில் கண்ணீருடன்
உதட்டில் சிரிப்பை
எப்படி வரவைத்தாய் என்று...

- - - - - - - - - - - - - - - - - -  

அதிகாலை
நீ குளிக்க வருகையில்
நிலவு உன்னை
பின் தொடர்கிறது..
சூரியன் அதை
வழி மறிக்கின்றது...

அப்பாடா என்கிறது
என் மனம்..

- - - - - - - - - - - - - - - - - -  

உனக்காக மட்டும் என் காதல் - 02


- - - - - - - - - - - - - - - - - - 

என்னை பார்த்த பின்
தலை குனிகின்றாய்..
அன்பே

நீ வெக்கப்படும் அழகை
நிலம் தானே பாக்கிறது...!!

- - - - - - - - - - - - - - - - - - 

அசையும் பூவே
உன் பின்னே பல கோடி
வண்ணத்து பூச்சிகள்
ஒரு நொடி கூட நிக்காதே...

தேன் எடுக்க துடிக்கின்றன...!!

- - - - - - - - - - - - - - - - - -  

பூக்களின் காட்டுக்குள்
வாடாத பூவாம் நீ...!!
உன் பாவாடைப் பூக்களிலே

தேன் உள்ளதாம்
உண்மையா...?

- - - - - - - - - - - - - - - - - -  

அன்பே
கடனாக ஒரு
முத்தம் தருவாயா...

தவணையடிப்படையில்
வட்டியுடன் தருகின்றேன்...

- - - - - - - - - - - - - - - - - - 

உன்னிடம் ஒரு முத்தம்
வாங்க பலமுறை
கெஞ்ச வைக்கிறாய்,

என்னிடம் மட்டும்
கண்களால் வங்கிவிடுகிறாய்
அது எப்படி...!!

- - - - - - - - - - - - - - - - - -  

உனக்காக மட்டும் என் காதல் - 01- - - - - - - - - - - - - - - - - - 

நான் போக
பல தெரு இருக்கிறது ..
நான் தொடர
பல மதம் இருக்கிறது..

நான் காதலிக்க
நீ மட்டும் தானே இருக்கிறாய்...!

- - - - - - - - - - - - - - - - - - 

நான் நடந்த தெருக்களில்
கற்கள் மட்டுமே
காத்துக்கிடந்தன....
நீ பூக்கள் வீசிவிட்டு
சென்று விட்டாய்...

என் கால்கள்
உன் தெருநோக்கியே...!!

- - - - - - - - - - - - - - - - - - 

காதல் வானில்
வானவில்லின் தடத்தில்
மேகங்கள் அகப்படுவது போலே

உன் அன்பு வலையில்
விரும்பி தான்
மாட்டிக்கொண்டேன்..!!

- - - - - - - - - - - - - - - - - - 

காலம் காதில்
சொல்லிப்போனது
எனக்கு
காதல் யோகம் என்று...

உன்னை பார்த்தபிறகு...

- - - - - - - - - - - - - - - - - - 

உன்னை பார்க்க நான்
உன் தெருவுக்கு வரமுன்
நீ வாசலுக்கு வந்துடுவாய்..

என்னை முதல் பார்த்துவிட
வேண்டும் என்று....!!

- - - - - - - - - - - - - - - - - -  

என் காதலியே...!!உலவும் உடம்பில் 
அலையும் மனதில்
அலையாய் வந்தவளே..
என் சுவாசத்தை மீட்டு
வந்து என்னில் கலந்தவளே..
என் காதலியே...!!

எம் காதல்..!உன் உதட்டினில் 
ஒளிந்திருக்கும்
வெக்கத்தில் தான் 
என் உயிர் உள்ளதடி..

நான் பார்க்கயில் நீ 
நிலம் பார்க்கையில் தான்
எம் காதல் தெரியுதடி..

தோளாக..!!நான் வாழ்கிறேன் உனக்காக
நீ தான் என் உறவாக 
வந்தபிறகு நான் உயிராக.. 
எழுகிறேன் விரைவாக..
உன்னை தாங்கும் தோளாக..!!

வசந்தம் தான்...!


நீயும் நானும் தோள் சாய்வது...
உலகில் இனிய பொழுது
வானத்தை போன்றது
எம் காதல்..
பிரிவென்பதே இல்லை..

இனி என்றுமே வசந்தம் தான்...

நினைத்து....!!நீ சமைக்காத
உணவினையும் 
சுவைத்து உண்ணுகிறேன்
நீ ஊட்டி விடுவதாய்
நினைத்து....

நீ மட்டும் தானே..!உன்னிடத்தில் எனக்குள்ள
பிரியத்தை விட,
என்னிடத்தில் உனக்குள்ள
பிரியம் அதிகம்...

எல்லா வழியிலும் எனக்கு
அன்பை தருபவள் 
நீ மட்டும் தானே..

உன்னோடு தான்..!!எப்போதும் உன்னோடு தான்
வாழ்கிறேன்...
இரவினில் துங்குவது 
உன் கனவோடு..
காலையில் எழுவது
உன் காலை வணக்கத்தோடு..

எப்படி மாற்றினாய்...!என்னிடம் இருந்த
கெட்ட பழக்கங்களை
எப்படி மாற்றினாய்...

இருந்தும் எனக்குள்ளே
சில உறுத்தல்கள்...

கனவில் ...!!நேற்று கனவில் 
மடியினில் தூங்கிவிட்டாய்...
எனக்கோ  தூக்கம் 
வந்து விட்டது..

விடிகையில் உன் மடியில்
தூங்கிக் கொண்டிருந்தேன்..
அதுவும் கனவில் தான்..

காதல் சுமையல்ல..!உன்னை அணைத்து 
தூக்கிய போது தான்
உணர்ந்து கொண்டேன்...

காதல் சுமையல்ல என்று...

தடங்கள்...!


நான் எழுதும் கவி வரிகள் 
நீ நடக்கும் கால் தடங்கள்...

தூக்கத்திலும் நீ தான்..
கனவுகளும் நீ தான்,,
என் உலகம் முழுதும்
உன் நினைவுகள் மட்டுமே...

நீ என்னை காதலித்தது..!


brown pig tails and grass
நீ என்னை காதலித்தது
பிரியத்தினாலா..??
பிரியக்கூடாது என்பதனாலா...??

ஏதும் கேக்காமல்
கல்யாணம் பண்ணிவிட்டேன்...
பிரியத்துடன் பிரியாமல் இருக்க...!!

என் உயிரானாய்...!


and from that second on... / megan alice.

யார் யாரோ வந்தாலும்
நீ தான் வந்து என் உறவானாய்..
உணர்வாலே உயிரானாய்..
எனை தாங்கும் உறவானாய்...

என் உயிரானாய்...

நீ தூங்கிட..!!


நீ தூங்கையில் நான் 
முழித்திருப்பேன்.. நீ
தூங்கிடும் அழகைப்பார்த்திட...
அந்த இரவினில் தவமிருப்பேன்
நீ பேசுவதை கேட்டிட...
தினம் நாளுமே..

நீ சொன்னால்..!உன்னை கருவினில் 
சுமக்க வில்லை...
இதயத்தில் சுமக்கின்ரீன்...
அது சுமை அல்ல சுகம் தானடி..

என் ஆயுளின் அந்தி வரை
வருவேன் என நீ சொன்னால்..

என் காதலியே..என் கவிதைக்கு ராணி ..
காதலுக்கு நீ மஹா ராணி..
உன் அன்புக்கு நான் அடிமை...
அரவணைப்பில் உன் அடிமை...

என் காதலியே..

நீதான்...!


மலை என்னை மரமாய் 
சாய்த்தவள் நீ தான்,
கரும் பாறை நெஞ்சை
குடைந்தவலும் நீதான்...

எனை மீட்டு என்னிடம் தந்த
ஒரு பெண்ணும் நீதான்...

என் கவிதை..!!நான் கவிதை எழுத நினைக்கையில்
என் கண்ணோடு நீ...
அது முடியும் பொழுதினில் 
என் நெஞ்சோடு நீ...

கவிதையே என் கவிதை ஆகும் பொது....

கவிதையா என்று...!தினம் ஒரு வரி இங்கு
உன்னை எழுதிட ஆசை...
ஒரு எழுத்து எழுதுகையில் 
காகிதம் சிரிக்கிறது..

கவிதைக்கே கவிதையா என்று...

இறந்தால்..!நீ எனக்கு எல்லை என்றால்
இருந்தும் ஒன்று தான்
இறந்தும் ஒன்று தான்...

இறந்தால் பிணம்...
இருந்தால் நடைப்பிணம்...

நீயே..!எனக்கு யாரும் இல்லை 
என்னும் போதெல்லாம்
நீயே இருந்தாய்..

நிஜத்திலும் கற்பனையிலும்
உன்னோடு மட்டுமே
கதைத்துக்கொண்டு வாழ்கிறேன்..!

முகவரி..!


எழுதிய கடிதங்களின் முகவரி
நீ என தெரியாமல்
எறிந்து விட்டேன்...


அன்பே இபோது 
உன் முகவரிக்கு மட்டுமே
கவிதை எழுதுகிறேன்...!

சர்வாதிகாரியா நீ...!சர்வாதிகாரியா நீ 

நீண்ட காலம் என் நெஞ்சை
ஆட்சி செய்தவளை 
கலைத்து விட்டு 
நீ ஆட்சி ஏறிவிட்டாய்...

உன் முகத்தை...!!உன்னை அடிக்கடி பார்க்க ஆசை..
உள்ளிருக்கும் நீயோ
வெளியே வரமால்
வம்பு பண்ணுகிறாய்...

இபோதெல்லாம் 
நிலாவில் மட்டும் தான்
காண்கிறேன்..
உன் திருமுகத்தை...!!

காதலும் கூட...!!ஓவியன் கை வண்ணம் மாறலாம்
சிற்பியின் உளி சறுக்கலாம்
பூவுக்கே மணம் மாறலாம்..

ஏன் உனக்கே ரசனை மாறினாலும்..
கவிஞன் என் கற்பனை மாறாது..
உன் மீதுள்ள காதலைப் போல...! 

நீ கிடைத்ததால்...!உன்னை நீ 
கொடுத்து வைத்தவள் என்பாய்
உண்மை யாருக்கும் தெரியாது
உண்மையில் 
கொடுத்து வைத்தவன் 
நான் தான் என்று..

நீ கிடைத்ததால்...!!

உன்னை அடைய..!!என் மீது காதலை வளர்த்து 
உன் மீது வளரவிட்டாய்...

உன்னை அடையவே நான் 
காத்திருந்தேன்...
இத்தனை யுகங்களாக...

அழித்தவள் நீ..!என்னை அழிக்கவந்த 
பெண்களில் உனக்கு தான்
முதலிடம்...

என் நெஞ்சத்தின் கவலைகளை
அழித்தவள் நீ....

உதயமானது...!!


நீ மழையில் நனைகையில் 
நிலவே நீரில் மூழ்கி தத்தளிக்கிறது...
நீ புன்னகைக்கையில் 
சூரியனே மறைந்து விடுகின்றது..
நீ வெக்கப்படுகையில்
மலர்கள் வாடி விடுகின்றன...

உன் பார்வை பட்டதால் 
என் வாழ்க்கை மட்டும் உதயமானது..

சில்மிச கனவுகள்..!என் சில்மிச கனவுகளை 
மாலையாக கோர்த்து வைத்துள்ளேன்..
நீ மாலை சூடும் நாளில்
என் 
கனவுகள் நிஜமாகும்..

மனைவி நீயே ..!!காதல் இனி வராது என
நண்பனிடம் சொன்னேன்...
கல்லயணம் எனக்கில்லை 
என்றான் யோசியக்காரன்..

ஆனால் 
மனைவி நீயே கிடைத்துவிட்டாய்...!!

தேவதை...!!


எனக்கென பிறந்தவள் நீ என
தேவதை உன் பெயர் சொல்லி போனது..
தேவதையே தேவதையின் 
பெயர் சொல்லி போனது...

நீ தன மண்ணில் வாழும்
தேவதையாமே...

முதல் முத்தம்...!
ஒரு முத்தம் கேட்டு நின்றேன்,
உயிர் வரை அணைத்து
பல முத்தம் தந்தாய்...

உதட்டு வழியே உயிரையும் 
உருவி விட்டாய்...!

பாட்டெழுத..!எம்மை எழுத 
கம்பனிடம் கூட வரிகள் 
இல்லையாம்..  அன்பே..
காதல் கடலில் மூழ்கிவிட்டதால்
கவிஞ்ஞர்கள் தவம் இருக்கிறார்கள்..


நம் தரிசனத்திற்கு பின்
பாட்டெழுத...

கவிதை...!!!ஓரெழுத்து கவிதை
நீ...
ஈரெழுத்து கவிதை
நான்...
மூவெழுத்து கவிதை
காதல்...
நன்கெழுத்து கவிதை
உன் பெயர்....
                                                      ஜந்தேளுத்து கவிதை
                                                      என் பெயர்..

உன்னை காதலிக்கிறேன்....!!
என் நெஞ்சத்தில் மலர்ந்த
காதல் உறவே...!!
என் எண்ணத்தில் உதித்த
காதல் கவியே...!!
என் கனவினில் தோன்றிய
காதல் கனியே...!!
உன்னை காதலிக்கிறேன் நான்..

எந்தன் ராணி....!
என்
இதயத்தின்
ஆழத்தில்
வாசம்
செய்பவளே...
நீ தானடி
எந்தன்
ராணி......

உன் மூச்சு....!


என் மூச்சு
உன் இடை அசைவு...
என் உதட்டின் அசைவு
உன் பெயர்....
என் கண்ணசைவு...
உன் தலை அசைவு
என் இதயத்துடிப்பு
உன் மூச்சு....!!


உன் மூச்சு இல்லையேல்
இல்லை என் மூச்சு...

உன் உடலில்..!!


மழையில் நனைந்த
காலைப்பூ போன்ற
உன் உடலில் ..
நிலா போன்ற
முகம் உள்ளதடி பெண்ணே...


உன் நெற்றியில் உள்ள
சிறு போட்டு அந்த
நட்சத்திரம்.....

உனக்கு ஈடில்லை...!!


பூ...
மழை....
நிலா...
நட்சத்திரங்கள்..


இயற்கையின் அதிசயங்கள்
இவை ஒன்றும் உனக்கு
ஈடில்லை அன்பே...