பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..



பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..
காதலர் தினம் 2013

 By- தமிழ்நிலா
 Music Credit- U1



"பூக்களும் பட்டாம் பூச்சிகளின் தேவதையும்.."

01
உல‌கி‌ல் ‌கி‌ட்ட‌த்த‌ட்ட
இருபதா‌யிர‌ம் வகை
ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் உ‌ள்ளனவாம்..
உன்னையும் சேர்த்து...

02
சூரியனை கண்டபின் பூக்கும் 
மலர்க்காடு போல்,
உன்னைக் கண்டபின் பூக்கிறது..
என் மனக்காடு...!

03
பட்டாம் பூச்சிகள் யோசிக்கின்றன
நீ பூவாய் பிறந்திருக்கலாம் என்று
பூக்கள் பேசிக்கொண்டன
இவள் பட்டம் பூச்சி என்று..

04
பூக்களின் சட்டை
உனக்கு மட்டுமே
அழகாக உள்ளது...

05
உன் கூந்தல் சிந்திய
நீரில் இருந்து முளைத்தவையே
இந்த பூக்கள்...

06
தேவர்களின் கால்
நிலத்தில் படுவதில்லையாம்
உன்னை பார்த்தபின்
என் கால்களும் கூட..

07
நீ
பூக்களை சுற்றி ரசித்துக்கொண்டாய்
பட் டா ம் பூச்சி
பறப்பது போல் இருந்தது எனக்கு ...

08
தலையில் சூடிக்கொள்ளாதே
தேனை உருஞ்சி விடும்
இந்த பூக்கள்..

09
இறக்கை முளைத்த
வானவில்லின் தோழி நீ..

10
மழையில் நனைந்தபடி
ஆடிக்கொண்டிருந்தாய்..
பூக்கள் அபிநயித்துகொண்டன...

11
சிறகடிக்கும் பட்டாம் பூச்சிகளும்
சிறைப்பிடிக்கும் என்று
உன்னிடம் தான்
கற்றுக்கொண்டேன்..

12
இங்கே ஒரு
பட்டாம் பூச்சி
பூக்களின் ஆடையுடன்..

13
பட்டாம் பூச்சியின் கால்களில்
ஒட்டிய மகரந்தம் போல
என்னோடு நீ..

14
நீ உறங்க போவதையே
பூக்களால் தாங்க முடிவதில்லை
அதனால் தான் என்னவோ
மாலையிலே உதிர்ந்துவிடுகின்றன.

15
பட்டாம் பூச்சிகளின் வலையில்
சிலந்தி எப்படி
சிக்கிக்கொண்டது

16
பூக்களின் கோலம் நீ...
பட்டம் பூச்சிகளின் ஓவியம் நீ

17
மெதுவாக நட
பூச்சாடி ஒன்று
தப்பி ஓடுகிறது என
நினைக்கப் போகிறார்கள்...

18
பூக்கள்
பட்டாம் பூச்சியாகின்றன
உருமாற்றம் இப்படியும் நடக்கும்..
தேவதை என் மனைவி ஆகும் போது..

19
பட்டாம் பூசிகள்
தூக்கி வைத்து விளையாடும்
குட்டி தேவதை நீ..

20
பட்டாம் பூச்சிகளுடன்
விளையாடுகிறாய் நீ
பூக்கள்  பறந்துவிளையாடுவது
போல் எனக்கு..

21
கொலிசுகள்
கொஞ்சி விளையாடுகின்றன,
தேவதைகள் அலறினார்கள்
இதோ எம் தேவதை வருகிறாள் என்று...

தமிழ்நிலா