skip to main
|
skip to sidebar
நிலாக்காலம் ..!
குட்டிக் குட்டி காதல்...
உயிர்த்தமிழ்
**
காதல்கவிதை
என் காதலியே...!!
உலவும் உடம்பில்
அலையும் மனதில்
அலையாய் வந்தவளே..
என் சுவாசத்தை மீட்டு
வந்து என்னில் கலந்தவளே..
என் காதலியே...!!
எம் காதல்..!
உன் உதட்டினில்
ஒளிந்திருக்கும்
வெக்கத்தில் தான்
என் உயிர் உள்ளதடி..
நான் பார்க்கயில் நீ
நிலம் பார்க்கையில் தான்
எம் காதல் தெரியுதடி..
தோளாக..!!
நான் வாழ்கிறேன் உனக்காக
நீ தான் என் உறவாக
வந்தபிறகு நான் உயிராக..
எழுகிறேன் விரைவாக..
உன்னை தாங்கும் தோளாக..!!
வசந்தம் தான்...!
நீயும் நானும் தோள் சாய்வது...
உலகில் இனிய பொழுது
வானத்தை போன்றது
எம் காதல்..
பிரிவென்பதே இல்லை..
இனி என்றுமே வசந்தம் தான்...
நினைத்து....!!
நீ சமைக்காத
உணவினையும்
சுவைத்து உண்ணுகிறேன்
நீ ஊட்டி விடுவதாய்
நினைத்து....
நீ மட்டும் தானே..!
உன்னிடத்தில் எனக்குள்ள
பிரியத்தை விட,
என்னிடத்தில் உனக்குள்ள
பிரியம் அதிகம்...
எல்லா வழியிலும் எனக்கு
அன்பை தருபவள்
நீ மட்டும் தானே..
உன்னோடு தான்..!!
எப்போதும் உன்னோடு தான்
வாழ்கிறேன்...
இரவினில் துங்குவது
உன் கனவோடு..
காலையில் எழுவது
உன் காலை வணக்கத்தோடு..
எப்படி மாற்றினாய்...!
என்னிடம் இருந்த
கெட்ட பழக்கங்களை
எப்படி மாற்றினாய்...
இருந்தும் எனக்குள்ளே
சில உறுத்தல்கள்...
கனவில் ...!!
நேற்று கனவில்
மடியினில் தூங்கிவிட்டாய்...
எனக்கோ தூக்கம்
வந்து விட்டது..
விடிகையில் உன் மடியில்
தூங்கிக் கொண்டிருந்தேன்..
அதுவும் கனவில் தான்..
காதல் சுமையல்ல..!
உன்னை அணைத்து
தூக்கிய போது தான்
உணர்ந்து கொண்டேன்...
காதல் சுமையல்ல என்று...
தடங்கள்...!
நான் எழுதும் கவி வரிகள்
நீ நடக்கும் கால் தடங்கள்...
தூக்கத்திலும் நீ தான்..
கனவுகளும் நீ தான்,,
என் உலகம் முழுதும்
உன் நினைவுகள் மட்டுமே...
நீ என்னை காதலித்தது..!
நீ என்னை காதலித்தது
பிரியத்தினாலா..??
பிரியக்கூடாது என்பதனாலா...??
ஏதும் கேக்காமல்
கல்யாணம் பண்ணிவிட்டேன்...
பிரியத்துடன் பிரியாமல் இருக்க...!!
என் உயிரானாய்...!
யார் யாரோ வந்தாலும்
நீ தான் வந்து என் உறவானாய்..
உணர்வாலே உயிரானாய்..
எனை தாங்கும் உறவானாய்...
என் உயிரானாய்...
நீ தூங்கிட..!!
நீ தூங்கையில் நான்
முழித்திருப்பேன்.. நீ
தூங்கிடும் அழகைப்பார்த்திட...
அந்த இரவினில் தவமிருப்பேன்
நீ பேசுவதை கேட்டிட...
தினம் நாளுமே..
நீ சொன்னால்..!
உன்னை கருவினில்
சுமக்க வில்லை...
இதயத்தில் சுமக்கின்ரீன்...
அது சுமை அல்ல சுகம் தானடி..
என் ஆயுளின் அந்தி வரை
வருவேன் என நீ சொன்னால்..
என் காதலியே..
என் கவிதைக்கு ராணி ..
காதலுக்கு
நீ மஹா ராணி..
உன் அன்புக்கு நான் அடிமை...
அரவணைப்பில் உன் அடிமை...
என் காதலியே..
நீதான்...!
மலை என்னை மரமாய்
சாய்த்தவள் நீ தான்,
கரும் பாறை நெஞ்சை
குடைந்தவலும் நீதான்...
எனை மீட்டு என்னிடம் தந்த
ஒரு பெண்ணும் நீதான்...
என் கவிதை..!!
நான் கவிதை எழுத நினைக்கையில்
என் கண்ணோடு நீ...
அது முடியும் பொழுதினில்
என் நெஞ்சோடு நீ...
கவிதையே என் கவிதை ஆகும் பொது....
கவிதையா என்று...!
தினம் ஒரு வரி இங்கு
உன்னை எழுதிட ஆசை...
ஒரு எழுத்து எழுதுகையில்
காகிதம் சிரிக்கிறது..
கவிதைக்கே கவிதையா என்று...
இறந்தால்..!
நீ எனக்கு எல்லை என்றால்
இருந்தும் ஒன்று தான்
இறந்தும் ஒன்று தான்...
இறந்தால் பிணம்...
இருந்தால் நடைப்பிணம்...
நீயே..!
எனக்கு யாரும் இல்லை
என்னும் போதெல்லாம்
நீயே இருந்தாய்..
நிஜத்திலும் கற்பனையிலும்
உன்னோடு மட்டுமே
கதைத்துக்கொண்டு வாழ்கிறேன்..!
முகவரி..!
எழுதிய கடிதங்களின் முகவரி
நீ என தெரியாமல்
எறிந்து விட்டேன்...
அன்பே இபோது
உன் முகவரிக்கு மட்டுமே
கவிதை எழுதுகிறேன்...!
சர்வாதிகாரியா நீ...!
சர்வாதிகாரியா நீ
நீண்ட காலம் என் நெஞ்சை
ஆட்சி செய்தவளை
கலைத்து விட்டு
நீ ஆட்சி ஏறிவிட்டாய்...
உன் முகத்தை...!!
உன்னை அடிக்கடி பார்க்க ஆசை..
உள்ளிருக்கும் நீயோ
வெளியே வரமால்
வம்பு பண்ணுகிறாய்...
இபோதெல்லாம்
நிலாவில் மட்டும் தான்
காண்கிறேன்..
உன் திருமுகத்தை...!!
காதலும் கூட...!!
ஓவியன் கை வண்ணம் மாறலாம்
சிற்பியின் உளி சறுக்கலாம்
பூவுக்கே மணம் மாறலாம்..
ஏன் உனக்கே ரசனை மாறினாலும்..
கவிஞன் என் கற்பனை மாறாது..
உன் மீதுள்ள காதலைப் போல...!
நீ கிடைத்ததால்...!
உன்னை நீ
கொடுத்து வைத்தவள் என்பாய்
உண்மை யாருக்கும் தெரியாது
உண்மையில்
கொடுத்து வைத்தவன்
நான் தான் என்று..
நீ கிடைத்ததால்...!!
உன்னை அடைய..!!
என் மீது காதலை வளர்த்து
உன் மீது வளரவிட்டாய்...
உன்னை அடையவே நான்
காத்திருந்தேன்...
இத்தனை யுகங்களாக...
அழித்தவள் நீ..!
என்னை அழிக்கவந்த
பெண்களில் உனக்கு தான்
முதலிடம்...
என் நெஞ்சத்தின் கவலைகளை
அழித்தவள் நீ....
உதயமானது...!!
நீ மழையில் நனைகையில்
நிலவே நீரில் மூழ்கி தத்தளிக்கிறது...
நீ புன்னகைக்கையில்
சூரியனே மறைந்து விடுகின்றது..
நீ வெக்கப்படுகையில்
மலர்கள் வாடி விடுகின்றன...
உன் பார்வை பட்டதால்
என் வாழ்க்கை மட்டும் உதயமானது..
சில்மிச கனவுகள்..!
என் சில்மிச கனவுகளை
மாலையாக கோர்த்து வைத்துள்ளேன்..
நீ மாலை சூடும் நாளில்
என்
கனவுகள் நிஜமாகும்..
மனைவி நீயே ..!!
காதல் இனி வராது என
நண்பனிடம் சொன்னேன்...
கல்லயணம் எனக்கில்லை
என்றான் யோசியக்காரன்..
ஆனால்
மனைவி நீயே கிடைத்துவிட்டாய்...!!
தேவதை...!!
எனக்கென பிறந்தவள் நீ என
தேவதை உன் பெயர் சொல்லி போனது..
தேவதையே தேவதையின்
பெயர் சொல்லி போனது...
நீ தன மண்ணில் வாழும்
தேவதையாமே...
முதல் முத்தம்...!
ஒரு முத்தம் கேட்டு நின்றேன்,
உயிர் வரை அணைத்து
பல முத்தம் தந்தாய்...
உதட்டு வழியே உயிரையும்
உருவி விட்டாய்...!
பாட்டெழுத..!
எம்மை எழுத
கம்பனிடம் கூட வரிகள்
இல்லையாம்.. அன்பே..
காதல் கடலில் மூழ்கிவிட்டதால்
கவிஞ்ஞர்கள் தவம் இருக்கிறார்கள்..
நம் தரிசனத்திற்கு பின்
பாட்டெழுத...
« Newer Posts
Older Posts »
Home
HOME
About Me
Sanjay Thamilnila
வரவேற்பு இல்லாவிட்டாலும் எனக்கு விரும்பியதை எழுத நினைக்கறேன்....
View my complete profile
உனக்காக மட்டும் என் காதல்- book
Followers
Labels
உனக்காக மட்டும் என் காதல்
(10)
Blog Archive
►
2013
(1)
►
February
(1)
►
2012
(4)
►
October
(1)
►
September
(1)
►
July
(1)
►
January
(1)
▼
2011
(44)
►
November
(10)
▼
October
(34)
என் காதலியே...!!
எம் காதல்..!
தோளாக..!!
வசந்தம் தான்...!
நினைத்து....!!
நீ மட்டும் தானே..!
உன்னோடு தான்..!!
எப்படி மாற்றினாய்...!
கனவில் ...!!
காதல் சுமையல்ல..!
தடங்கள்...!
நீ என்னை காதலித்தது..!
என் உயிரானாய்...!
நீ தூங்கிட..!!
நீ சொன்னால்..!
என் காதலியே..
நீதான்...!
என் கவிதை..!!
கவிதையா என்று...!
இறந்தால்..!
நீயே..!
முகவரி..!
சர்வாதிகாரியா நீ...!
உன் முகத்தை...!!
காதலும் கூட...!!
நீ கிடைத்ததால்...!
உன்னை அடைய..!!
அழித்தவள் நீ..!
உதயமானது...!!
சில்மிச கனவுகள்..!
மனைவி நீயே ..!!
தேவதை...!!
முதல் முத்தம்...!
பாட்டெழுத..!
►
2010
(17)
►
June
(17)
My Blog List
இதயத்தின் ஓசை..
வெள்ளி மலரே.....
13 years ago