என் காதலியே...!!



உலவும் உடம்பில் 
அலையும் மனதில்
அலையாய் வந்தவளே..
என் சுவாசத்தை மீட்டு
வந்து என்னில் கலந்தவளே..
என் காதலியே...!!

எம் காதல்..!



உன் உதட்டினில் 
ஒளிந்திருக்கும்
வெக்கத்தில் தான் 
என் உயிர் உள்ளதடி..

நான் பார்க்கயில் நீ 
நிலம் பார்க்கையில் தான்
எம் காதல் தெரியுதடி..

தோளாக..!!



நான் வாழ்கிறேன் உனக்காக
நீ தான் என் உறவாக 
வந்தபிறகு நான் உயிராக.. 
எழுகிறேன் விரைவாக..
உன்னை தாங்கும் தோளாக..!!

வசந்தம் தான்...!


நீயும் நானும் தோள் சாய்வது...
உலகில் இனிய பொழுது
வானத்தை போன்றது
எம் காதல்..
பிரிவென்பதே இல்லை..

இனி என்றுமே வசந்தம் தான்...

நினைத்து....!!



நீ சமைக்காத
உணவினையும் 
சுவைத்து உண்ணுகிறேன்
நீ ஊட்டி விடுவதாய்
நினைத்து....

நீ மட்டும் தானே..!



உன்னிடத்தில் எனக்குள்ள
பிரியத்தை விட,
என்னிடத்தில் உனக்குள்ள
பிரியம் அதிகம்...

எல்லா வழியிலும் எனக்கு
அன்பை தருபவள் 
நீ மட்டும் தானே..

உன்னோடு தான்..!!



எப்போதும் உன்னோடு தான்
வாழ்கிறேன்...
இரவினில் துங்குவது 
உன் கனவோடு..
காலையில் எழுவது
உன் காலை வணக்கத்தோடு..

எப்படி மாற்றினாய்...!



என்னிடம் இருந்த
கெட்ட பழக்கங்களை
எப்படி மாற்றினாய்...

இருந்தும் எனக்குள்ளே
சில உறுத்தல்கள்...

கனவில் ...!!



நேற்று கனவில் 
மடியினில் தூங்கிவிட்டாய்...
எனக்கோ  தூக்கம் 
வந்து விட்டது..

விடிகையில் உன் மடியில்
தூங்கிக் கொண்டிருந்தேன்..
அதுவும் கனவில் தான்..

காதல் சுமையல்ல..!



உன்னை அணைத்து 
தூக்கிய போது தான்
உணர்ந்து கொண்டேன்...

காதல் சுமையல்ல என்று...

தடங்கள்...!


நான் எழுதும் கவி வரிகள் 
நீ நடக்கும் கால் தடங்கள்...

தூக்கத்திலும் நீ தான்..
கனவுகளும் நீ தான்,,
என் உலகம் முழுதும்
உன் நினைவுகள் மட்டுமே...

நீ என்னை காதலித்தது..!


brown pig tails and grass
நீ என்னை காதலித்தது
பிரியத்தினாலா..??
பிரியக்கூடாது என்பதனாலா...??

ஏதும் கேக்காமல்
கல்யாணம் பண்ணிவிட்டேன்...
பிரியத்துடன் பிரியாமல் இருக்க...!!

என் உயிரானாய்...!


and from that second on... / megan alice.

யார் யாரோ வந்தாலும்
நீ தான் வந்து என் உறவானாய்..
உணர்வாலே உயிரானாய்..
எனை தாங்கும் உறவானாய்...

என் உயிரானாய்...

நீ தூங்கிட..!!


நீ தூங்கையில் நான் 
முழித்திருப்பேன்.. நீ
தூங்கிடும் அழகைப்பார்த்திட...
அந்த இரவினில் தவமிருப்பேன்
நீ பேசுவதை கேட்டிட...
தினம் நாளுமே..

நீ சொன்னால்..!



உன்னை கருவினில் 
சுமக்க வில்லை...
இதயத்தில் சுமக்கின்ரீன்...
அது சுமை அல்ல சுகம் தானடி..

என் ஆயுளின் அந்தி வரை
வருவேன் என நீ சொன்னால்..

என் காதலியே..



என் கவிதைக்கு ராணி ..
காதலுக்கு நீ மஹா ராணி..
உன் அன்புக்கு நான் அடிமை...
அரவணைப்பில் உன் அடிமை...

என் காதலியே..

நீதான்...!


மலை என்னை மரமாய் 
சாய்த்தவள் நீ தான்,
கரும் பாறை நெஞ்சை
குடைந்தவலும் நீதான்...

எனை மீட்டு என்னிடம் தந்த
ஒரு பெண்ணும் நீதான்...

என் கவிதை..!!



நான் கவிதை எழுத நினைக்கையில்
என் கண்ணோடு நீ...
அது முடியும் பொழுதினில் 
என் நெஞ்சோடு நீ...

கவிதையே என் கவிதை ஆகும் பொது....

கவிதையா என்று...!



தினம் ஒரு வரி இங்கு
உன்னை எழுதிட ஆசை...
ஒரு எழுத்து எழுதுகையில் 
காகிதம் சிரிக்கிறது..

கவிதைக்கே கவிதையா என்று...

இறந்தால்..!



நீ எனக்கு எல்லை என்றால்
இருந்தும் ஒன்று தான்
இறந்தும் ஒன்று தான்...

இறந்தால் பிணம்...
இருந்தால் நடைப்பிணம்...

நீயே..!



எனக்கு யாரும் இல்லை 
என்னும் போதெல்லாம்
நீயே இருந்தாய்..

நிஜத்திலும் கற்பனையிலும்
உன்னோடு மட்டுமே
கதைத்துக்கொண்டு வாழ்கிறேன்..!

முகவரி..!


எழுதிய கடிதங்களின் முகவரி
நீ என தெரியாமல்
எறிந்து விட்டேன்...


அன்பே இபோது 
உன் முகவரிக்கு மட்டுமே
கவிதை எழுதுகிறேன்...!

சர்வாதிகாரியா நீ...!



சர்வாதிகாரியா நீ 

நீண்ட காலம் என் நெஞ்சை
ஆட்சி செய்தவளை 
கலைத்து விட்டு 
நீ ஆட்சி ஏறிவிட்டாய்...

உன் முகத்தை...!!



உன்னை அடிக்கடி பார்க்க ஆசை..
உள்ளிருக்கும் நீயோ
வெளியே வரமால்
வம்பு பண்ணுகிறாய்...

இபோதெல்லாம் 
நிலாவில் மட்டும் தான்
காண்கிறேன்..
உன் திருமுகத்தை...!!

காதலும் கூட...!!



ஓவியன் கை வண்ணம் மாறலாம்
சிற்பியின் உளி சறுக்கலாம்
பூவுக்கே மணம் மாறலாம்..

ஏன் உனக்கே ரசனை மாறினாலும்..
கவிஞன் என் கற்பனை மாறாது..
உன் மீதுள்ள காதலைப் போல...! 

நீ கிடைத்ததால்...!



உன்னை நீ 
கொடுத்து வைத்தவள் என்பாய்
உண்மை யாருக்கும் தெரியாது
உண்மையில் 
கொடுத்து வைத்தவன் 
நான் தான் என்று..

நீ கிடைத்ததால்...!!

உன்னை அடைய..!!



என் மீது காதலை வளர்த்து 
உன் மீது வளரவிட்டாய்...

உன்னை அடையவே நான் 
காத்திருந்தேன்...
இத்தனை யுகங்களாக...

அழித்தவள் நீ..!



என்னை அழிக்கவந்த 
பெண்களில் உனக்கு தான்
முதலிடம்...

என் நெஞ்சத்தின் கவலைகளை
அழித்தவள் நீ....

உதயமானது...!!


நீ மழையில் நனைகையில் 
நிலவே நீரில் மூழ்கி தத்தளிக்கிறது...
நீ புன்னகைக்கையில் 
சூரியனே மறைந்து விடுகின்றது..
நீ வெக்கப்படுகையில்
மலர்கள் வாடி விடுகின்றன...

உன் பார்வை பட்டதால் 
என் வாழ்க்கை மட்டும் உதயமானது..

சில்மிச கனவுகள்..!



என் சில்மிச கனவுகளை 
மாலையாக கோர்த்து வைத்துள்ளேன்..
நீ மாலை சூடும் நாளில்
என் 
கனவுகள் நிஜமாகும்..

மனைவி நீயே ..!!



காதல் இனி வராது என
நண்பனிடம் சொன்னேன்...
கல்லயணம் எனக்கில்லை 
என்றான் யோசியக்காரன்..

ஆனால் 
மனைவி நீயே கிடைத்துவிட்டாய்...!!

தேவதை...!!


எனக்கென பிறந்தவள் நீ என
தேவதை உன் பெயர் சொல்லி போனது..
தேவதையே தேவதையின் 
பெயர் சொல்லி போனது...

நீ தன மண்ணில் வாழும்
தேவதையாமே...

முதல் முத்தம்...!




ஒரு முத்தம் கேட்டு நின்றேன்,
உயிர் வரை அணைத்து
பல முத்தம் தந்தாய்...

உதட்டு வழியே உயிரையும் 
உருவி விட்டாய்...!

பாட்டெழுத..!



எம்மை எழுத 
கம்பனிடம் கூட வரிகள் 
இல்லையாம்..  அன்பே..
காதல் கடலில் மூழ்கிவிட்டதால்
கவிஞ்ஞர்கள் தவம் இருக்கிறார்கள்..


நம் தரிசனத்திற்கு பின்
பாட்டெழுத...

கவிதை...!!!



ஓரெழுத்து கவிதை
நீ...
ஈரெழுத்து கவிதை
நான்...
மூவெழுத்து கவிதை
காதல்...
நன்கெழுத்து கவிதை
உன் பெயர்....
                                                      ஜந்தேளுத்து கவிதை
                                                      என் பெயர்..

உன்னை காதலிக்கிறேன்....!!




என் நெஞ்சத்தில் மலர்ந்த
காதல் உறவே...!!
என் எண்ணத்தில் உதித்த
காதல் கவியே...!!
என் கனவினில் தோன்றிய
காதல் கனியே...!!
உன்னை காதலிக்கிறேன் நான்..

எந்தன் ராணி....!




என்
இதயத்தின்
ஆழத்தில்
வாசம்
செய்பவளே...
நீ தானடி
எந்தன்
ராணி......

உன் மூச்சு....!


என் மூச்சு
உன் இடை அசைவு...
என் உதட்டின் அசைவு
உன் பெயர்....
என் கண்ணசைவு...
உன் தலை அசைவு
என் இதயத்துடிப்பு
உன் மூச்சு....!!


உன் மூச்சு இல்லையேல்
இல்லை என் மூச்சு...

உன் உடலில்..!!


மழையில் நனைந்த
காலைப்பூ போன்ற
உன் உடலில் ..
நிலா போன்ற
முகம் உள்ளதடி பெண்ணே...


உன் நெற்றியில் உள்ள
சிறு போட்டு அந்த
நட்சத்திரம்.....

உனக்கு ஈடில்லை...!!


பூ...
மழை....
நிலா...
நட்சத்திரங்கள்..


இயற்கையின் அதிசயங்கள்
இவை ஒன்றும் உனக்கு
ஈடில்லை அன்பே...

நிஜத்திலும் உண்டு...!!


கவலைகள் இன்றிய வாழ்வு
கனவில் மட்டும் அல்ல
நிஜத்திலும் உண்டு


எம் வாழ்வு போல........

மகிழ்ச்சியின் படிகள்...!!


நட்பு என்னும் வெள்ளத்தில்
கை பிடித்த நாம்..
காதல் என்னும் வள்ளத்தில்
மிதக்கிறோம்..
எம் பயணத்தின் தடைகள்
ஒவ்வொன்றும் இனி
எம் மகிழ்ச்சியின் படிகள்...!

நீ பூ...!!






நீ பூ...!!
நான் வண்ணத்து பூச்சி..
உன்னை மட்டுமே
நான் சுற்றிக் கொண்டிருப்பேன்...
நீ வாடினால்
அன்று எனக்கு மரணம்...

தாங்க முடியாது என்பதால்...!!






உன்னை விட என் ஆயுள்
ஒரு நொடி குறைவு
அன்பே....
உன் பிரிவை என்னால்
தாங்க முடியாது என்பதால்...!

செல்லமே...!!





'நான் உங்களுக்கு தான்' என்று
நீ எனக்கு சொன்னதும்
உன்னுடன் ஓராயிரம் யுகங்கள்
வாழ்ந்ததாய் என்னுள்
பல கற்பனைகள் செல்லமே...!

அன்பே...!!



உந்தன் விம்பங்கள்
எந்தன் நெஞ்சத்தில்.....
உன் நினைவுகள்
என் இதயத்தில்....
உன் கனவுகள்
என் கண்களில்....
அன்பே....!!
உன்னால் சுழலுது என் உலகம்...

நீ என்னுள் இருப்பதனால்..




நான் என்னை கவனிப்பதில்லை
நீ என்னை கவனித்ததால்
என்னை கவனிக்க தொடங்கினேன்
நான் அழகனாகிவிட்டேன்....
அழகியே நீ என்னுள் இருப்பதனால்..

பூரிக்கின்றோம்...!!


உன் காதல் ஜெயித்ததால்
நீயும்....
என் வாழ்வு கிடைத்ததால்
நானும்...
எம் மனம் சேர்ந்ததால்
காதலும்...
எமை ஒன்றாய் இணைத்ததால்
கடவுளும்.... 
                                            பூரிக்கின்றோம்.

என் உறவு...!!



எனக்காக காத்திருக்கிறேன் என்றாய்...
என்னை காதலிக்கிறேன்
என்றும் சொன்னாய்..!!
நான் தான் உன் உறவென்றாய்...
நீயே என் உறவானாய்....

என் மனைவி...!!






காதல் ஒரு முறை வந்தது
காதல் மீண்டும் ஒரு முறை வந்தது...!!
வந்தவள் காதலி அல்ல
என் மனைவி...

என் உயிர் கவிதை ....

அ


அன்பே
அழகெல்லாம்
அசந்து போகும்
அழகி நீயடி...!!


ஆ


ஆருயிரே - என்
ஆயுள் - உன்
ஆயுளின்
ஆழத்தில் உள்ளதடி.....!!


இ


இளையவளே
இனியவளே - உன்னால்
இனிமயனதடி
இன்று என் வாழ்வு...!!


ஈ


ஈன்ற தாயின்
ஈகையும் - காதலை
ஈன்ற உன்
ஈகையும் எனக்கொன்று...!!


உ 


உயிரே என்
உயிராய்
உள்ளவளே என்
உயிரில் கலந்துவிட்டாய்...!!


ஊ


ஊமை என்னை
ஊஞ்சலில் ஆடவைத்த என்
ஊதாப்பூவே நாம்
ஊர் போற்ற வாழ்வோம் வா...!!


எ


எந்தன்
எதிர்காலம் நீ
என தெரியாமல்
என்னை இழந்துவிட்டேன்..!


ஏ


ஏன் இந்த வாழ்க்கை என
ஏங்கிய போது நீ வந்தாய்
ஏழை நான் உன்னால்
ஏழு உலகமும் பெற்றேன்...!!


ஜ


ஜம் பூதம் ஆளும்
ஜநிலங்கள் வாழ்த்தும்
ஜம் பொறியோடு வரும் நீ என்
ஜம் புலனில் உலவுகிறாய்....!!


ஒ


ஒருவனுக்கு
ஒருத்தியாய் வாழ்வோம்
ஒரு நாள் வருவாள் 
ஒளியாக எம் பிள்ளை...!!


ஓ


ஓவியமே உன்னை எண்ணி
ஓயாமல்
ஓடி என் இதயம்
ஓய்வின்றி துடிக்கிறது...!!


ஒள


ஒள என கௌவிடும்
ஒளடவ ராகமே
ஒளவையின் தமிழே
ஒளடதமதடி உன் அன்பு...!!